About Us

HOME ABOUT US

எங்களை பற்றி

R.S. வேலுமணியின் மருத்துவச் சிறப்புகள்

தமிழ்நாட்டின் "தலைசிறந்த எலும்பு முறிவு டாக்டர்" என விருது பெற்றவர். மேலும் சேவை செம்மல் விருது பெற்றவர். சுமார் 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கி உள்ளார். சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். 15 ஆண்டுகள் எலும்பு முறிவு சிகிச்சையில் சிறந்து விளங்குபவர். எலும்புகள் எத்தனை துண்டு துண்டாக உடைந்தாலும் குணமாக்குபவர். X Ray பார்க்காமலே எலும்பு முறிவுகளை கண்டுபிடிப்பவர். X Ray பார்க்காமலே எந்த மாதிரி எலும்புகள் உடைந்து இருப்பது என்பதை கோடிட்டு காட்டுபவர். X Ray பார்க்காமலே எப்படி எலும்பு உடைந்து இருக்கிறது, எதனால் எலும்பு உடைந்தது என்று துல்லியமாக கணித்து சொல்பவர் என்பதோடு மூன்று தலை முறைகளாக வைத்தி்யம் செய்து வரும் டாக்டர் என்பது தனிச் சிறப்பாகும்.

Welcome to our site
கை,கால் மற்றும் எலும்பு முறிவு வர்ம சிகிச்சை.

எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்

  • எலும்பு முறிவு ஏற்பட்ட உடன் பாதிப்படைந்த உறுப்புகளை சிறிதளவும் அசைக்காமல் உடைந்த உறுப்பில் காட்டன் துணியை நீரில் நனைத்து இறுக்கம் இல்லாமல் சுற்றி கட்டி கொண்டு எங்கள் வைத்திய சாலைக்கு வரவும்.
  • கட்டு கட்டியவர்களை கட்டு கட்டிய உறுப்புகளை சிறிதளவும் அசைக்கவோ அசைத்து பார்க்கவோ கூடாது.
  • கட்டை அவிழ்க்கவோ சிறிதளவும் மாற்றம் செய்யவோ கூடாது.
  • கட்டுகளில் தண்ணீர் படக் கூடாது.
  • கையில் எலும்பு உடைந்து கட்டு கட்டியவர்கள் T. சர்ட் அணிய கூடாது.
  • கால் எலும்பு உடைந்து கட்டு கட்டியவர்கள் பேண்ட் அணிய கூடாது.
  • எலும்பு உடைந்தவர்கள் கண்டிப்பாக மது அருந்த கூடாது. போதை பழக்கங்கள் எதுவும் இருக்க கூடாது.
  • இரண்டாவது கட்டில் இருந்து தினந்தோறும் கட்டுக்குள் 20 சொட்டு நல்லெண்ணெய் விடவும்.
  • கட்டு கட்டியவர்கள், சுகர், இதய நோய், தைராய்டு மற்றும் எல்லா விதமான நோய் உள்ளவர்களும் எப்போதும் போன்றே மருந்து மாத்திரைகள் உட்கொள்ளலாம்.
  • எலும்பு உடைந்தவர்கள் புளித்த தயிர், புளித்த மோர், புளித்த மாவில் செய்த இட்லி, தோசை, புளித்த பழைய கஞ்சி, நாட்டு தக்காளி, எலுமிச்சை பழம், புளித்த பழங்கள், முட்டை, கருவாடு, உருளைக் கிழங்கு, வாழைக்காய் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.
  • ஐஸ் வாட்டர் போன்ற குளிர்ந்த உணவுகள், புளித்த உணவுகள், வாயு உணவுகள் சாப்பிடக் கூடாது.

மருத்துவரின் அறிவுரைகள்

எலும்பு முறிவுக்கு ஆபரேசன் தேவையில்லை. மருந்துகள், மாத்திரைகளே தேவையில்லை. எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ள உறுப்புகளை துல்லியமாக சேர்த்து வைத்து தேவையான அழுத்தத்துடன் சில மூலிகைகளின் மூலம் கட்டு கட்டுவது மூலம் இயற்கையாகவே எலும்பு சேர்ந்து விடுகிறது. இதற்கு எந்த ஒரு ஆபரேசனும் மருந்து மாத்திரைகளோ தேவையில்லை. எலும்பு என்பது சுண்ணாம்பு சத்தின் ஒரு படிவம். இது உடைவதின் மூலம் உயிருக்கோ அல்லது உடைந்த உறுப்புகளுக்கோ எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.ஆனால் தவறுதலான நவீன ஆபரேசன் முறையில் அவர்கள் கொடுக்கும் அனஸ்த்திசியா மற்றும் உடம்புக்கு கேடு விளைவிக்கும் மருந்து மாத்திரைகளின் மூலம் உயிருக்கு ஆபத்து உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எங்களது கட்டு கட்டும் பாரம்பரிய வைத்தியத்தில் ஒரு சதவீதம் கூட பக்க விளைவுகள் கிடையாது, எலும்புகள் உடையாமல் இருக்க சிறு வயதில் இருந்தே நன்றாக விளையாட்டு, வேலைகள், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நன்றாக உடல் உறுப்புகள் பலம் அடைந்து எலும்பு முறிவுகளை தவிர்க்கலாம்.